ஜிலேபி கொடுத்த நபர் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவு செய்த சமந்தா: வைரல் வீடியோ

ஜிலேபி கொடுத்த நபர் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவு செய்த சமந்தா: வைரல் வீடியோ

நடிகை சமந்தா தனக்கு ஜிலேபி குறித்த நபர் குறித்த புகைப்படத்தை வெளியிட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ள நிலையில் அவை வைரலாகி வருகின்றன.

நடிகை சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதில் இருந்து குணமாக போராடி வருவதாகவும் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருந்தார். இந்த பதிவை அடுத்து அவர் விரைவில் குணமாக ரசிகர்கள், திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் சமந்தா நடித்த ’யசோதா’ திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு திருப்தி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய ஜிம் பயிற்சியாளர் குறித்து ஒரு சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து உள்ளார். எனக்கு பிடித்த ஜிலேபிக்கு தகுதியான அளவுக்கு நான் ஒர்க் அவுட் செய்தேன் என்று எனது பயிற்சியாளர் ஜுனைத் ஷேக் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் இன்று அவர் யசோதாவின் வெற்றியை கொண்டாடுவதற்காக அந்த படத்தில் உள்ள ஆக்ஷன் காட்சியை நினைத்து பெருமைப் பட்டு எனக்கு வாழ்த்து தெரிவித்து ஜிலேபி கொடுத்தார்.

கடந்த சில மாதங்களாக அவர் என்னுடன் இருந்ததால்தான் இதையெல்லாம் என்னால் செய்ய முடிந்தது. அவர் எனக்கு மிகவும் ஊக்கமளித்து இடைவிடாத ஆதரவளித்தார் என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவில் சமந்தா தனது உடல் எடை குறைந்த தகவல்களையும், தனது கைக்கு பயிற்சி அளித்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

LATEST News

Trending News