இந்த ரெண்டு பேரும் என்னை படுக்கைக்கு அழைத்தார்கள்.. வெளிப்படையாக கூறிய நடிகை தாரணி..!
திரை உலகில் நடக்கின்ற அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி அடிக்கடி தகவல்கள் வந்து அதிர்ச்சிகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் நடிகை தாரணியை இரண்டு பேர் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்ததாக ஓப்பனாக பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி பிரபலங்கள் பலர் நடிகைகளை தவறாக பயன்படுத்துவதோடு அவர்களுக்கு பல்வேறு மனரீதியான மற்றும் உடல் ரீதியான சிக்கல்களை கொடுத்து வருகிறார்.
இது பற்றி இன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக கருத்துக்கள் தினம் தினம் தினுசு தினுசாக வெளி வந்து உள்ளது. அது மட்டுமல்லாமல் இது போன்ற விஷயத்தை சொல்ல தயங்கிய பெண்கள் தற்போது வெளிப்படையாக பேசுவது ஒரு பெரும் மாற்றம் என கூறலாம்.
அந்த வகையில் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை 30 ஆண்டுகளுக்கு மேலாக நடிப்புத் துறையில் தனது பயணத்தை வெற்றிகரமாக நடத்திய சினிமா நடிகை தான் தாரணி. இவரை நீங்கள் தாலாட்டு சீரியலில் பார்த்திருக்கலாம்.
மேலும் இவரை நீங்கள் பட்ஜெட் பத்மநாபன் படத்தில் நடிகர் வடிவேலுவின் மனைவியாக நடித்ததின் மூலம் அறிந்திருக்கலாம். தாரணி பெரும்பாலான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். அது மட்டுமல்லாமல் பெரிய அளவு இந்த படம் இவருக்கு ரீச் கொடுத்தது.
இதனை அடுத்து இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று அனைவரும் நினைத்தார்கள். ஆனால் அனைவரது நினைப்பிற்கும் நேர் மாறாக சில வருடங்களிலேயே திரையுலகில் இருந்து காணாமல் போனார்.
இதனால் இவர் எங்கு போனார் என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்த காலகட்டத்தை அடுத்து, ஒரு சில படங்கள் மற்றும் சீரியல்களில் வாய்ப்பு கிடைக்க சிறப்பாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் தனது சினிமா அனுபவம் குறித்து பேசிய நடிகை தாரணி சினிமா உலகில் தான் அனுபவித்த கஷ்டங்கள் மற்றும் இன்னல்கள் பற்றி மனம் திறந்து ஓப்பனாக பேசிய பேச்சு தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
திரை உலகில் ஆரம்ப நாட்களில் இவர் நடித்த போது எந்த விதமான பிரச்சனைகளும் இவருக்கு ஏற்படவில்லை. இரண்டு படங்களில் நடிக்கும் போது மிகவும் எளிதாகவும் மன நிறைவாகவும் இருந்தது. இதனை அடுத்து ஒரு படத்தில் ஹீரோயினியாக நடிக்கும் போது இவரிடம் படத்தின் இயக்குனர் மற்றும் கேமராமேன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய கேட்டார்கள் என்ற பகீர் தகவலை பகிர்ந்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் இயக்குனரை விட கேமரா மேன் அதில் அதிகம் ஆர்வம் கொண்டதாகவும், அதை வெளிப்படையாக தன்னிடம் கேட்டதாகவும் கூறியதை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மனதளவில் சங்கடங்களை சந்தித்த அவர் எப்படியோ அந்த கேமரா மேன் இடம் பேசி சமாளித்து விட்டார்.
அப்படி அந்த கேமரா மேன் இடம் பேசும் போது தயவு செய்து என்னை தப்பா எடுத்துக் கொள்ளாதீர்கள். நான் சினிமாவில் எப்படி வந்தேன் என்று பல பேரிடம் கேட்டுப் பாருங்கள். தவறான வழியில் வந்திருந்தால் நீங்கள் சொல்வதை நான் செய்கிறேன் என்று உடைத்து பேசி விட்டார்.
இந்நிலையில் இந்த பதிலை சற்றும் எதிர்பாராத கேமராமேன், பிறகு என்னை அந்த விஷயத்துக்கு கட்டாயப்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டார். ஆனால் அவர் மனதில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை ஷூட்டிங் ஸ்பாட்டில் வேலை செய்யும் போது அதிக சூடாக இருக்கும் லைட்டை என் முகத்தில் அடிக்கக்கூடிய வகையில் காட்டி என்னை மிகவும் கஷ்டப்படுத்தி இருக்கிறார் என நடிகை தாரணி கூறிய விஷயம் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தன் இச்சைக்கு இணங்க மறுத்த காரணத்தால் தான் அவரை அதிக சூடு இருக்கும் விளக்கினை காட்டி இம்சை செய்திருப்பார் என்று ரசிகர்கள் அனைவரும் கூறி வருகிறார்கள்.