பீரியட்ஸ் வலி.. கல்யாணத்துக்கு முன்னாடி கொடைக்கானலில் சித்து செய்த செயல்.. ஸ்ரேயா எமோஷனல்..

பீரியட்ஸ் வலி.. கல்யாணத்துக்கு முன்னாடி கொடைக்கானலில் சித்து செய்த செயல்.. ஸ்ரேயா எமோஷனல்..

இன்று திரை உலகை பொருத்த வரை வெள்ளி திரைக்கு இருக்கும் வரவேற்பு சின்ன துறைக்கும் உள்ளது. அந்த வகையில் சின்ன திரையில் சிறப்பாக சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ரேயா அஞ்சன் பல ரசிகர்களை அவரது நடிப்பின் மூலம் ஈர்த்திருக்கிறார்.

இவர் திருமணத்திற்கு முன்பு கொடைக்கானலுக்கு ஷூட்டிங் சென்ற சமயத்தில் எதிர்பாராத விதமாக பீரியட்ஸ் ஏற்பட்டு விட அந்த நேரத்தில் தான் பட்ட வேதனையான வலிகளைப் பற்றி அண்மை பேட்டி ஒன்றில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அதனைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து வந்த ஸ்ரேயா அஞ்சல் மற்றும் சித்து ஜோடி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர்களுக்கு இணையத்தில் பேன்கள் அதிக அளவு உள்ளார்கள். இந்த ஜோடி இருவரும் ரீல் லைஃபிலும் மக்களை கவர்ந்தவர்கள்.

இவர்கள் நடித்த முதல் சீரியலிலேயே இவர்களுக்குள் காதல் ஏற்பட்டு அதன் பிறகு திருமணம் செய்து கொண்டார்கள். ராஜா ராணி இரண்டு சீரியலில் அற்புதமான நடிப்பை சித்து கதாநாயகனாக நடித்து வெளிப்படுத்தி இருந்தார்.

 


மேலும் ஜீ தமிழ் ரஜினி என்ற சீரியலில் நடித்த ஸ்ரேயா இதனை அடுத்து பெரிய சீரியல்களில் நடிக்கவில்லை. தற்போது தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் தங்களது திருமண வாழ்க்கையைப் பற்றிய சுவாரசியமான விஷயங்களை கூறியிருக்கிறார்.

இந்த பேச்சில் ஸ்ரேயா சித்துவோடு சீரியலில் நடிக்கும் போது ஆரம்ப காலங்களில் இருவர் இடையே சண்டை தான் அதிக அளவு வந்துள்ளது. எனக்கு தமிழ் தெரியாததால் தமிழ் சொல்லிக் கொடுத்தது சித்து தான். அதற்குப் பிறகு ஒரு நாள் நடந்த சம்பவத்தை தன்னால் இன்று வரை மறக்க முடியவில்லை என கூறி இருக்கிறார்.

ஒரு சமயம் இவர்கள் ஷூட்டிங்கிற்காக கொடைக்கானல் போயிருந்தார்கள். அங்கு எதிர்பாராத விதமாக பீரியட்ஸ் ஏற்பட்டுவிட்டது. அந்த நேரத்தில் நான் பேடு ஏதும் எடுத்துக் கொண்டு செல்லவில்லை.

 

எனவே ஷூட்டிங் கேன்சல் செய்து விட்டு இருக்கும் இடத்துக்கு வந்தால் கூட ஒரு மணி நேரம் டிராவல் செய்ய வேண்டும். அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி இருந்த போது எனக்கு சித்து பல்வேறு வகைகளில் உதவியை செய்திருக்கிறார்.

இந்த சமயத்தில் சித்து எனக்கு செய்த உதவியின் மூலம் அவர் பெயரில் எனக்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டு அவரை பிடிக்க ஆரம்பித்தது. இதனை அடுத்து தான் நான் அவரை திருமணம் செய்து கொண்டேன்.

திருமணத்துக்குப் பிறகு ஒரு சிலர் குழந்தை எப்போது என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் எங்கள் வீட்டில் உள்ளவர்கள் எங்களிடம் அதை பற்றி இதுவரை எந்த ஒரு வார்த்தையும் கேட்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு நன்றாகத் தெரியும் நாங்கள் இப்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறோம். எனவே தான் இந்த முடிவை நாங்கள் தள்ளிப் போட்டு இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஒரு பெண் இவருக்கு சூர்யா, ஜோதிகா குழந்தைகளோடு இருக்கும் புகைப்படத்தையும் ரன்பீர் கபூர் குழந்தைகளோடு இருக்கும் புகைப்படத்தையும் அனுப்பி வைத்து என் தன்னிடம் கேள்விகளை கேட்டதாக கூறியவர் இதனைக் கொண்டு என்னிடம் ஆசைகள் இருக்கத்தானே செய்யும் என்ற கேள்வியை வைப்பார்.

மேலும் ஒரு சமயம் கர்ப்பிணியாக இருப்பது போல் நடிப்பதை அடுத்து எல்லோரும் எங்களிடம் குழந்தை எங்கே என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். எல்லாவற்றிற்கும் ஒரு சரியான நேரம் அமையும் என்று ஸ்ரேயா அஞ்சன் கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து பீரியட் சமயத்தில் சித்து கொடைக்கானல் ஷூட்டிங்கில் திருமணத்திற்கு முன்பு செய்த செயலை பற்றி எமோஷனலாக கூறிய ஸ்ரேயாவின் பேட்டி இணையத்தில் வைரலாகி விட்டது.

LATEST News

Trending News

HOT GALLERIES