ஒரே நாளில் ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் கவிழ்த்த அர்ச்சனா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வைக்கப்பட்ட டாஸ்க் ஒன்றில் மாயா தினேஷ் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.
பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா என 11 பேர் வெளியேறியுள்ளனர்.
இவர்களின் அனன்யா மற்றும் விஜய் வர்மா இருவரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்த வார தலைவராக நிக்ஷன் இருந்து வரும் நிலையில் அவரை வெளியேற்றவும் பூர்ணிமா மாயா திட்டம் தீட்டி வருகின்றனர்.
தற்போது வைத்த புதிய டாஸ்க் ஒன்றில் அர்ச்சனா, கூல் சுரேஷ் அதிக கைதட்டலை வாங்கி அனைத்து போட்டியாளர்களையும் கவர்ந்துள்ளனர்.