மாலத்தீவில் மயக்கும் பிகினி போட்டோஷூட்.. 46 வயது அஜித் பட நாயகியின் புகைப்படங்கள்..!

மாலத்தீவில் மயக்கும் பிகினி போட்டோஷூட்.. 46 வயது அஜித் பட நாயகியின் புகைப்படங்கள்..!

அஜித் படத்தில் நாயகியாக அறிமுகமான நடிகைக்கு தற்போது 46 வயதாகும் நிலையில் அவர் மாலத்தீவில் எடுத்த பிகினி போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

அஜித் நடித்த 'உன்னை தேடி’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மாளவிகா. இவருடைய இரண்டாவது படமும் அஜித் நடித்த ‘ஆனந்த பூங்காற்றே’ என்பதும், இந்த படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது,.

அதன் பிறகு ’ரோஜாவனம்’ ’வெற்றி கொடி கட்டு’ ’பேரழகன்’ ’சந்திரமுகி’ உட்பட ஒரு சில தமிழ் படங்களிலும் , பல தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருந்தார். இந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்த நிலையில் 2009 ஆம் ஆண்டு அவர் நடிப்பதை நிறுத்திவிட்டார். இருப்பினும் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவர் பிரபலமாக இருந்தார் என்பதும் அவ்வப்போது அவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது நடிகை மாளவிகா மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கு கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து ’என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான இடத்திற்கு வந்துள்ளேன்’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

 

 

View this post on Instagram

A post shared by Shweta Konnur Menon (@shwetakonnurmenon)

LATEST News

Trending News

HOT GALLERIES