ஆர் ஆர் ஆர் படத்தின் தமிழக விநியோக உரிமை இவ்வளவு கோடி ரூபாயா?

ஆர் ஆர் ஆர் படத்தின் தமிழக விநியோக உரிமை இவ்வளவு கோடி ரூபாயா?

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர் ஆர் ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் ஜனவரி 7 ஆம் தேதி ரிலீஸாகிறது.

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் , அஜய் தேவ்கான் மற்றும் ஆலியா பட் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஜனவரி 7 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகிறது.
 

இந்த படத்துக்கு தமிழகத்திலும் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை லைகா நிறுவனம் 43 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாம். தமிழ் சூப்பர் ஸ்டார்கள் நடிக்காத ஒரு படத்துக்கு இவ்வளவு தொகை விலைபோயிருப்பது திரைத்துறையினருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES