பெருசா இருக்கு, உன் உடம்பு அப்படி இருக்குனு சொல்லி.. விவாகரத்து குறித்து சீரியல் நடிகை கிருத்திகா பேட்டி
சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை கிருத்திகா. இவர் பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கிருத்திகா தனது விவாகரத்து குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், சன் டிவியில் ஒளிபரப்பான ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் 83 kg எடை இருந்தேன். அந்த சீரியலில் அக்கா கதாபாத்திரம் என்பதால் தோற்றம் இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள்.
என் கணவர் என்னுடைய உடம்பை பார்த்து, எப்படி இருக்க பாரு.. பெருசா இருக்க என்று உடல் எடையை வைத்து சண்டை போடா ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் சண்டை அதிகம் ஆக, இருவரும் சேர்ந்து பரஸ்பர முடிவை எடுத்து பிரிந்துவிட்டோம் என்று கிருத்திகா கூறியுள்ளார்.