மீண்டும் செம்பருத்தி சீரியல் பார்வதியுடன் இணைந்த ஆதி.. வெளியான அழகிய ஜோடியின் புகைப்படம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் சீரியலில் முக்கியமான ஒன்று செம்பருத்தி.
இதில் பார்வதி மற்றும் ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷபானா, கார்த்திக்கின் ஜோடி பொருத்தம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
ஆனால் இடையில் இந்த சீரியல் விட்டு வெளியேறினார் நடிகர் கார்த்திக். இதன்பின் இந்த கதாபாத்திரத்தில் வேறொருவர் நடிக்க, சீரியலுக்கு ரசிகர்கள் குறைந்தனர்.
இந்நிலையில் மீண்டும் கார்த்திக், ஷபானா ஜோடி இணைந்தபடி புகைப்படம் ஒன்றை ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆம் நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்கு, அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட வாழ்த்து தெரிவித்துள்ளார் ஷபானா.
இதோ அந்த புகைப்படம்..