ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் நடிகர் திடீர் உயிரிழப்பு
ஜீ தமிழில் புதியதாக தொடங்கப்பட்ட தொடர்களில் ஒன்று தான் கெட்டி மேளம்.
திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது. புதியதாக தொடங்கப்பட்ட இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தொடர் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க தொடரில் நடித்தவர் குறித்து ஒரு சோகமான தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பிரபாகரன் உயிரிழந்துள்ளார். அவரின் திடீர் மறைவிற்கு என்ன காரணம் என தெரியவில்லை. இந்த தகவலை ஜீ தமிழ் தங்களது இன்ஸ்டாவில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளனர்.