மது போதையில் உளறும் சீதாலட்சுமி!! வைரலாகும் நடிகை மிருணாள் தாகூரின் அந்த வீடியோ...
கடந்த 2022 -ம் ஆண்டு வெளியான ‘ சீதா ராமம் ’ படத்தின் மூலம் ஓவர்நைட் பிரபலமானவர் தான் நடிகை மிருணாள் தாகூர். இவர் தனது முதல் படத்திலேயே பட்டிதொட்டி எங்கும் பாப்புலர் ஆகிவிட்டார். இவரது அழகு மற்றும் நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
சீதா ராமம் படத்திற்குப் பிறகு 'ஹாய் நன்னா' படத்தின் மூலம் இன்னொரு வெற்றியைப் பெற்றார். அதன்பின் தி ஃபேமிலி மேன் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்தார். தற்போது இந்தி படமான பூஜா மேரி ஜான் படத்தில் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மிருணால் தாகூர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். தற்போது மிருணாள் தாகூர் மது அருந்தியபடி எடுத்த வீடியோ என்று சமுகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஆனால் அதில் அவர் குடிக்கவில்லை, காமெடியாக எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தான் என்று பலர் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.