மீண்டும் அதே நடிகையுடன் இணையும் சுந்தர் சி.. ஆனால், தமன்னா கிடையாது
சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த படம் அரண்மனை 4. இப்படத்தில் ராஷி கன்னா மற்றும் தமன்னா என இரு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.
படம் முழுக்க இருவருக்கும் வலுவான கதாபாத்திரத்தை வைத்த சுந்தர் சி, இறுதியில் ஒரு குத்து பாடலை வைத்து முடித்தார். இந்த நிலையில், அடுத்ததாக தான் இயக்கும் படத்திலும் ராஷி கன்னாவை தான் கதாநாயகியாக கமிட் செய்துள்ளாராம்.
ஆனால், இதில் தமன்னா இல்லை. மேலும் இப்படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பல வருடங்கள் இடைவேளைக்கு பின் மீண்டும் இருவரும் இப்படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.