முதல் கணவரை பிரிந்த நாதஸ்வரம் சீரியல் நடிகை..2வது திருமணம் - அட மாப்பிள்ளை இவரா?
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களை ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத சீரியலாக இடம் பிடித்த தொடர் தான் நாதஸ்வரம். இந்த தொடர், 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தவர் ஸ்ரித்திகா.
இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பு, வெண்ணிலா கபடி குழு, மகேஷ் சரண்யா மற்றும் பலர், வேங்கை, போன்ற படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்திருக்கிறார்.இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் செய்து கோடா நிலையில், சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டார்.
இந்த நிலையில், ஸ்ரித்திகா, மகராசி சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த ஆரியன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக அவர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சில வருடங்களுக்கு முன்பு நானும், ஆர்யனும் எண்களின் திருமண வாழ்க்கையிலிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தோம்.
இதற்கு நாங்கள் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. இப்போது எங்களுடைய கடந்த வாழ்க்கை பற்றிய எந்த ஒரு எதிர்மறையான விஷயங்களையும் இங்கு பகிர்ந்து கொள்ள நாங்கள் விரும்பவில்லை. நட்பும் புரிதலும் எங்களுடைய அடுத்தக்கட்ட நகர்விற்கான நம்பிக்கையை கொடுத்துள்ளது.
உங்களுடைய சப்போர்ட்டினாலும் எங்களுடைய பெற்றோர்களின் ஆசியாலும் நாங்கள் இருவரும் பதிவு திருமணம் செய்திருக்கிறோம். தொடர்ந்து உங்களுடைய அன்பையும், ஆதரவையும் எங்களுக்குக் கொடுங்கள். சீக்கிரம் இது தொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்கிறோம் என தெரிவித்துள்ளார்.