இப்ப தான்பா நிம்மதியா இருக்கு, பெரும் சர்ச்சைக்கு பிறகு மணிமேகலை சொன்னதை பாருங்களேன்
மணிமேகலை சில நாட்களுக்கு முன்பு மிகப்பெரும் குண்டை தூக்கி போட்டார். தன்னால் இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருக்க முடியாது என்று ஒரு அறிக்கையை விட்டார்.
அதில் ப்ரியங்காவை குறிப்பிட்டு அவர் அனைவரின் வேலையையும் அவரே பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார் என சொல்ல, பிறகு என்ன இணையம் கொதிக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் ப்ரியங்கா குக் வித் கோமாளி டைட்டில் ஜெயித்து அவர் வேலையை அவர் பார்க்க தொடங்கி விட்டார்.
மணிமேகலையும் தான் கட்டி வந்த வீட்டு பணிகளை பார்க்க தொடங்கியதோடு, இது தான் என்னை சந்தோஷமாகவும், அமைதியாகவும் ஆக்குகின்றது என்ற வாசகத்தை தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பிறகு என்ன எல்லோரும் அவர்கள் வேலையை பார்க்க தொடங்கிவிட்டனர், ரசிகர்களும் இதை கடந்து போக வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்ப்பார்ப்பும்.