தமிழ் சினிமாவை ஒதுக்க இதுதான் காரணம்.. நடிகை தன்ஷிகா ஓப்பன் டாக்..
மனதோடு மழைக்காலம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை சாய் தன்ஷிகா ஆனால், அந்த கதாபாத்திரம், பேசப்படவில்லை.
இதையடுத்து ஜெயம் ரவி நடித்த பேராண்மை படத்தில் நடித்தார். அந்த படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
அதன் பிறகு பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மகளாக நடித்திருந்தார்.
ஆனால் இந்த படத்திற்கு பிறகு இவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு படங்களிலும் வெப் தொடர்களில் நடித்து வரும் தன்ஷிகா, தற்போது ஐந்தாம் வேதம் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.
ஜீ5 ஓடிடி தளத்தில் ஐந்தாம் வேதம் வெப் தொடர் வெளியாகவுள்ளது. வெப் தொடரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகை தன்ஷிகா, தமிழ் மறந்துவிட்டீர்களா? வாய்ப்பு கிடைக்கவில்லை என்று என்னிடம் பலர் கேட்கிறார்கள்.
அப்படி கேட்கும் போது எனக்கு கஷ்டமாக இருக்கும், ஆனால், மனதிற்குள் தமிழில் அடுத்த படம் பண்ணினால் மனசுக்கு திருப்தியாக இருக்கும் படத்தை பண்ன வேண்டும் என்று இருந்தேன்.
எந்த சூழலிலும் யார் என்ன சொன்னாலும் காதில் வாங்காமல் இருந்தேன். தற்போது ஐந்தாம் வேதம் படம் மூலம் மீண்டும் வந்திருக்கிறேன் என்று தன்ஷிகா தெரிவித்துள்ளார்.