படவாய்ப்பிற்காக உடலளவில் தொல்லை கொடுத்த இயக்குநர்! கதாநாயகி லேகா வாஷிங்டனின் தற்போதைய நிலை
சினிமாவில் நடிகைகளுக்கு எதிராக உடலளவிலும் மனதளவில் கஷ்டங்கள் ஏற்பட்டு வருகிறது. அதிலும் வாய்ப்பிற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வற்புறுத்தி வரும் சூழலும் நடந்து வருகிறது. அப்படி பாதிக்கப்பட்ட நடிகைகள் தற்போது மீ டு மூலம் வெளிப்படையாக கூறி வருகிறார்கள்.
அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன் பிரபல இயக்குநரால் தனக்கு உடலளவிலான தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார்.
சில வருடங்களுக்கு முன் வெளியான ஜெயம் கொண்டான் படத்தில் நடிகர் வினய்க்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லேகா வாஷிங்டன்.
காதலர் தினம், உன்னாலே உன்னாலே, வா, கல்யாண சமையல் சாதம், அரிமா நம்பி ஆகிய படங்களில் நடித்தவர் லேகா. மேலும் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து நடிகர் சிம்புக்கு ஜோடியாக கெட்டவன் என்ற படத்தில் ஒப்பந்தமாகினார். அப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.
இதையடுத்து சில ஆண்டுகளுக்கு முன் நடிகை லேகா வாஷிங்டன் தனக்கு உடலால் தொல்லை கொடுத்த இயக்குநர் குறித்து பேட்டி கொடுத்திருந்தார்
“சினிமாவில் நடிகையாக இருப்பது சாதாரண காரியம் அல்ல. நிறைய தொல்லைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. எனக்கு நடந்த ஒரு சம்பவத்தை எப்போதுமே மறக்க முடியாது.
தமிழ் பட டைரக்டர் ஒருவர் என்னை அவரது காரில் அழைத்துச் சென்றார். உன்னை என் படத்தில் நடிக்க வைக்கிறேன் என்று வாக்குறுதி அளித்தார். பதிலுக்கு எனக்கு நீ என்ன தருவாய் என்று கேட்டார்.
அந்த இயக்குனர் கேட்டது புரியாதது போல் நடித்தேன். ஆனாலும் அவர் விடவில்லை. திரும்ப திரும்ப நீ என்ன தருவாய் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். எனக்கு கோபம் வந்தது. உங்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வேன் என்று மட்டும் நினைக்காதீர்கள் என்று அவரிடம் சொல்லி விட்டேன்.
படுக்கைக்கு வர மாட்டேன் என்று நான் சொன்னதும் அவர் அதிர்ச்சியானார். மீண்டும் மீண்டும் என்னை வற்புறுத்தினார். நான் முடியாது என்று பிடிவாதமாக மறுத்து விட்டேன். இதனால் அந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு தராமல் ஒதுக்கி விட்டார்.
தற்போட்க்ஹு பப்ளு சேட்டர்ஜி என்பவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகி வந்தார். தற்போது கணவருடன் செட்டிலாக இணையத்தில் சில போட்டோஹுட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.