Mandaadi Day 6 Box Office - மண்டாடி 6வது நாள் வசூல் தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸ் நிலைமை என்ன?
சென்னை: மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, சத்யராஜ், மிதுன், மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் மண்டாடி திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு தியேட்டர்களில் வெளியானது. படத்துக்கு விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு கிடைத்த சூழலில் வசூலிலும் சக்கைப்போடு போட்டுவருகிறது படம். இந்நிலையில் அதன் வசூல் குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.
சூரி கதையின் நாயகனாக நடிக்க தொடங்கியதிலிருந்தே அவருக்கு நல்ல காலமாகத்தான் இருக்கிறது. மாமன் படம் அப்படி இப்படி விமர்சனத்தை சந்தித்தாலும்; வசூலில் தப்பித்துவிட்டது. அதேபோல் கொட்டுக்காளி திரைப்படம் வணிக ரீதியாக தோற்றாலும், விமர்சன ரீதியாக சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டது. இப்படி ஏதோ ஒருவகையில் அவரது படங்கள் பெரிய வெளிச்சத்தை பெற்றுவிடுகின்றன. இப்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி படத்தில் நடித்திருக்கிறார்.

படம் ஓகேயா?: மண்டாடி திரைப்படம் வெளியான நாளில்தான் கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் சர்தார் 2 திரைப்படம் வந்தது. எனவே இந்த இரண்டு படங்களில் எது பந்தயம் அடிக்கும் என்ற ஆவல் அனைவரிடமும் எழுந்தது. இரண்டு படங்களின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிட்ட பிறகு கண்டிப்பாக மண்டாடிதான் வெல்லும் என்பது உறுதியாகிவிட்டது. ஏனெனில் அந்த அளவுக்கு படத்தில் பல விஷயங்கள் ரசிகர்களை கவர்ந்திருந்தன.
சூரி பக்கா மாஸ்: பாய்மர படகு போட்டியை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. இதுவரை தமிழ் சினிமாவில் அந்த தீமில் படங்கள் வந்ததில்லை. அதுவே மண்டாடிக்கு முதல் ப்ளஸ்தான். அந்த விஷயங்களை எல்லாம் ரசிகர்களுக்கு புரியும்படியும், பரபரப்பாகவும் திரைக்கதை அமைத்தும் இயக்குநர் பாஸ் ஆகிவிட்டார். இது ஒருபக்கம் இருக்க சூரியின் மாஸ் எலிவேஷன்கள் எல்லாம் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஸ்க்ரீனில் தோன்றிய பல சீன்களில் ரசிகர்களின் சத்தம் அதிகமாகவே கேட்டது.
அடுத்தக்கட்டத்தை நோக்கி சூரி: கருடன் திரைப்படத்தில் அவரது ஆக்ஷன் காட்சிகளை பார்த்தபோதே இவர் அடுத்த லெவலுக்கு போவார் என்று கணிக்கப்பட்டது. இப்போது மண்டாடியில் நடந்துவிட்டது. நிச்சயமாக இன்னும் சில வருடங்களில் சிவகார்த்திகேயனின் படத்தைவிட சூரி படம் அதிகம் வசூல் செய்தால்கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று சொல்லலாம். அதேபோல், சூரி தான் தேர்ந்தெடுக்கும் கதைகளிலும் தெளிவாக இருக்கிறார். அடுத்ததாக அயலான் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அது சென்னை வெள்ளத்தை மையமாக வைத்து உருவாக்கப்படும் என தெரிகிறது.
மண்டாடி வசூல்: இந்நிலையில் மண்டாடி திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தகவல்படி, நேற்று அப்படம் நான்கு கோடியே 40 லட்சம் ரூபாயை வசூலித்திருக்கிறதாம். மொத்தம் ஆறு நாட்களில் அப்படம் 50 கோடியே 25 லட்சம் ரூபாயை இந்தியாவில் அள்ளியிருப்பதாக அந்த இணையதளம் தரவுகளை வெளியிட்டிருக்கிறது. இன்னும் கூட்டம் தியேட்டர்களுக்கு செல்வதால் விரைவில் 100 கோடி ரூபாய் க்ளப்பில் சேர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: புதிய படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் குறிப்பிட்ட இந்த தளங்களான https://www.sacnilk.com/, https://x.com/taran_adarsh மற்றும் https://x.com/rameshlaus போன்ற அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் ஆதாரங்களிலிருந்து பெறப்பட்டது. பிலிமிபீட் தகவல் நோக்கங்களுக்காக இந்த எண்களை குறிப்பிடுகிறது என்றாலும், அவற்றின் துல்லியத்திற்கு பொறுப்பேற்காது என்பதை நினைவில் கொள்வது முக்கியம். இவை திரைப்பட வருவாயில் நம்பகமான தரவுகளுக்கு பரவலாக அங்கீகரிக்கப்பட்ட தளங்கள், மேலும் அவற்றின் அறிக்கைகளைக் குறிப்பிடுவது ஆன்லைனில் காணப்படும் தகவலை தெரிவிப்பதற்காக மட்டுமே.