சாய் பல்லவியிடம் பிடிக்காத விஷயம் இதுதான்! பொறாமையுடன் வெளிப்படையாகப் பேசிய நடிகை மஹிமா நம்பியார்

சாய் பல்லவியிடம் பிடிக்காத விஷயம் இதுதான்! பொறாமையுடன் வெளிப்படையாகப் பேசிய நடிகை மஹிமா நம்பியார்

தென்னிந்தியத் திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை சாய் பல்லவி. இயல்பான நடிப்பு, நடனத் திறமை மற்றும் எதார்த்தமான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை மஹிமா நம்பியார் சாய் பல்லவி குறித்து தெரிவித்துள்ள கருத்து தற்போது கவனம் பெற்றுள்ளது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்குப் பிடித்த நடிகர் யார் என்று கேட்கப்பட்டபோது, நடிகர் ரஜினிகாந்த் என மஹிமா பதிலளித்துள்ளார். தொடர்ந்து, ஒரு நடிகையிடம் பிடிக்காத விஷயம் என்ன என்று கேட்கப்பட்டபோது சாய் பல்லவியின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான காரணத்தையும் விளக்கிய அவர், சாய் பல்லவி ஏன் இவ்வளவு சிறப்பாக நடிக்கிறார் என்றும், எவ்வளவு முயற்சி செய்தாலும் அவருக்கு இணையாக நடிக்க முடியவில்லை என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சாய் பல்லவியின் நடிப்புத் திறமை தன்னை வியப்பில் ஆழ்த்துவதாகவும் மஹிமா தெரிவித்துள்ளார்.

மஹிமா நம்பியாரின் இந்தப் பேச்சு தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், சாய் பல்லவியின் நடிப்புத் திறமை குறித்த விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

LATEST News

Trending News