’பொன்னியின் செல்வன்’ கெட்டப்பில் ஜோதிகா, ஸ்ரீலீலா.. அடடே மாகாபா ஆனந்த் இங்க என்ன பண்றாரு!

’பொன்னியின் செல்வன்’ கெட்டப்பில் ஜோதிகா, ஸ்ரீலீலா.. அடடே மாகாபா ஆனந்த் இங்க என்ன பண்றாரு!

சென்னை: நடிகை ஜோதிகா இந்தி படங்களில் மட்டுமே கடந்த சில ஆண்டுகளாக நடித்து வந்த நிலையில், மீண்டும் தமிழ் சினிமா பக்கம் காலடி எடுத்து வைக்க உள்ளார் என்பதை விளம்பர படத்தில் நடித்து உறுதி செய்துள்ளார்.

இந்த ஆண்டு வெளியான சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஸ்ரீலீலா அடுத்த மாதம் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ஓம் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், ஜோதிகாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள போத்தீஸ் விளம்பரத்தின் ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் தீம்: ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட துணிக்கடைகளும், லலிதா ஜுவல்லரி, கல்யாண் ஜுவல்லர்ஸ் போன்ற நகைக்கடைகளும் பல கோடி ரூபாய் செலவு செய்து விளம்பரங்களாக எடுத்து தள்ளுவார்கள். கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து விளம்பரங்களை எடுத்துள்ள போத்தீஸ் தற்போது இந்த தீபாவளிக்காக ஜோதிகா, ஸ்ரீலீலாவை வைத்து பொன்னியின் செல்வன் தீமில் விளம்பரப்படம் எடுத்துள்ளனர் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால், காஞ்சிபுரம் மற்றும் பல்லவ இளவரசியின் கதாபாத்திரங்களையே விளம்பரத்தில் காட்டியுள்ளனர்.

ஜோதிகா, ஸ்ரீலீலா: பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் போல ஜோதிகாவும் த்ரிஷா போல ஸ்ரீலீலாவும் ஃபேஸ் ஆஃப் செய்வது முதல் இருவரும் ஆடிப்பாடி ஆடைகளை வாங்க வாங்க எனக் கூவி அழைப்பது வரை அந்த விளம்பரம் களைகட்டுகிறது. போத்தீஸ் ஸ்வர்ணமகாலுக்கும் சேர்த்தே இந்த விளம்பரமாம். தமிழில் மீண்டும் ஜோதிகாவை பார்த்த ரசிகர்கள் சூர்யாவின் அடுத்த படத்தில் நீங்களே ஹீரோயினாக நடிங்க என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த ஆண்டு ஸ்ரீலீலாவுக்கு பராசக்தி எதிர்பார்த்த வெற்றியை கோலிவுட்டில் தராத நிலையில், தனுஷின் ஓம் படம் கண்டிப்பாக அவருக்கு வெற்றிப் படமாக அமையும் என்றும் கூறுகின்றனர்.

LATEST News

Trending News