அடுத்தவன் பொண்டாட்டி அழகா இருந்தா பொறாமை.. இயக்குனர் வெளியிட்ட வீடியோ..!
நடிகர் மற்றும் இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது தத்துவ கருத்துக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வரும் நிலையில் சற்று முன் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
நம்ம பிறக்கும் போது கூடவே பிறந்தது ஒன்று இருக்கிறது, கை, கால், மண்டை போல் இன்னொரு விஷயம் இருக்கு, அதுதான் பொறாமை. ரோட்டில் நடந்து போற அடுத்தவன் பொண்டாட்டி அழகா இருந்தா அதை பார்த்து பொறாமை, பக்கத்து வீட்டுக்காரர் கார் வாங்கினால் அதை பார்த்து பொறாமை, ஆபீஸில் ஒருத்தருக்கு ப்ரமோஷன் கிடைத்துவிட்டால் அதைப் பார்த்து பொறாமை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
பொறாமை என்பது ஒரு கேன்சர் மாதிரி, உங்கள் உடலில் பரவி பரவி இருந்து கொண்டே இருக்கும், யாராக இருந்தாலும் இந்த பொறாமை இருக்கத்தான் செய்யும், இந்த பொறாமையை நாம் எப்படி இல்லாமல் வாழ்வது என்று கேட்டீர்கள் என்றால், வாழவே முடியாது, இதற்கு தீர்வும் கிடையாது, இதற்கு மருந்தும் கிடையாது.
அப்படி என்றால் என்ன செய்வது? எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நீங்கள் அதில் மல்லுக்கட்ட மல்லுக்கட்ட அதோட பவர் ஜாஸ்தி ஆகி கொண்டே இருக்கும். அதே போல் பொறாமையை நிறுத்தனும் என்று எண்ணி கொண்டே இருந்தால் அதோட பவர் ஜாஸ்தியாகி கொண்டே போகும். அது வளர்ந்து கொண்டே போகும்.
நீங்கள் பொறாமையை ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளுங்கள், ஆமாம் உன்னை பார்த்து நான் பொறாமைப்படுகிறேன், என்ன செய்ய முடியும், என்று சொல்லிவிட்டு நீங்கள் உங்கள் வேலையை கவனித்தால் கொஞ்ச நாளில் மேஜிக் போல் பொறாமை கொஞ்சம் குறைய ஆரம்பிக்கும்’ என்று செல்வராகவன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.