விஜய் டிவியிலிருந்து மற்றொரு சேனலுக்கு சென்ற பிரபலம் - அதுவும் இந்த சூப்பர்ஹிட் சீரியலுக்காக
சின்னத்திரையில் பிரமாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் தொடர்ந்து நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ்.
இதில் கடந்த சீசன் நான்காவது சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.
இந்த பிக் பாஸ் சீசன் 4ல் இருந்து பல பிரபலங்கள் தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4 மூலம் பிரபலமான சம்யுக்தா தீடீரென விஜய் டிவியில் இருந்து மற்றொரு டிவிக்கு சென்றுள்ளார்.
ஆம் சம்யுக்தா தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் சீரியலான அம்மன் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அந்த காட்சியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் விஜய் டிவியில் இருந்து சம்யுக்தா வெளியேறிவிட்டார் என்று ரசிகர்களால் கூறப்படுகிறது.
இதோ அந்த புகைப்படம்..
