முதல் சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ள பிக்பாஸ் 4 புகழ் சம்யுக்தா- எந்த சீரியல், தொலைக்காட்சி தெரியுமா?
பிக்பாஸ் 4வது சீசனில் மக்களுக்கு பரீட்சயப்பட்ட பிரபலங்கள் நிறைய பேர் கலந்து கொண்டார்கள். மக்களுக்கு சரியாக அறிமுகம் இல்லாதவர்களும் இருந்தார்கள்.
அதில் ஒருவர் தான் சம்யுக்தா, இவர் மாடலிங் துறையில் நீண்டநாள் பயணித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து பிரபலங்களுடன் கொண்டாட்டத்திலேயே உள்ளார்.
இந்த நிலையில் அவரைப் பற்றி ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது அவர் முதன் முறையாக ஒரு சீரியலில் கமிட்டாகியுள்ளார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் அம்மன் சீரியலில் தான் அவர் நடிக்கிறாராம்.