பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? வெளியான தகவல்!

பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? வெளியான தகவல்!

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகம் முதல் நாளில் தமிழகத்தில் 16 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மணிரத்னம், இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

இந்த திரைப்படத்தை தமிழகத்தில் மட்டும் சுமார் 800 க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிட்டனர். ஆனால் இந்த திரைப்படத்திற்கு நள்ளிரவு மற்றும் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கவில்லை.

இதன் காரணமாக ஒன்பது மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.  இருந்தபோதிலும் காலை மற்றும் மேட்னி காட்சிகளுக்கான வரவேற்பு பி மற்றும் சி சென்டர்களில் குறைவாக இருந்தன.

ஆனால் மாலை மற்றும் இரவு காட்சிகளுக்கான வரவேற்பு தமிழக முழுவதும் அதிகரித்தது.  இதன் காரணமாக முதல் நாளில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் 16 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியான போது முதல் நாளில், 20 கோடி ரூபாய் வசூல் செய்து இருந்தது. அந்த சாதனையை இரண்டாம் பாகம் முறியடிக்கவில்லை.

இருந்தபோதிலும் பொன்னின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கு வரவேற்பு அதிகரிக்க தொடங்கி இருப்பதால் வரும் நாட்களில் இன்னும் அதிகமான வசூலை ஈட்டும் என திரைத்துறையில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.

 பொன்னியின் செல்வன் முதல் பாகம் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் சுமார் 500 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி இருந்தது. அந்த வசூலை இந்த இரண்டாம் பாகம் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் சுமார் 500 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி இருந்தது. அந்த வசூலை இந்த இரண்டாம் பாகம் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

LATEST News

Trending News