அப்போ ஓ.கே..! - இப்போ வேணாம்..! - எல்லாம் முடிந்த பிறகு டாடா காட்டிய நடிகை..!

அப்போ ஓ.கே..! - இப்போ வேணாம்..! - எல்லாம் முடிந்த பிறகு டாடா காட்டிய நடிகை..!

பெரிய முதலாளி நிகழ்ச்சியில் பிரபலமானார் இந்த நடிகையின் காதலர். அந்த நிகழ்ச்சிக்கு நடிகையின் முயற்சியினாலேயே காதலர் சென்றார். அதனைத் தொடர்ந்து காதலர்களுக்குள் பிரச்சினை ஏற்பட, இருவரும் பிரிந்து விட்டனர்.

தன்னுடைய காதலர் பெரிய முதலாளி வீட்டில் இருக்கும் போது தனியார் ஊடகம் ஒன்றிற்கு கோக்குமாக்கான பேட்டி ஒன்றை கொடுத்தது தான் இதற்கு காரணமாக அமைந்து விட்டது. பட வாய்ப்பு வேண்டுமென்றால் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று வெள்ளந்தியாக கூறிவிட்டார் அம்மணி.

கல்யாணம் பண்ணிக்கப்போகும் பெண் இப்படி ஒரு வார்த்தை சொன்னால் யாருக்கு தான் கோபம் வராது. இதனால், கழட்டி விட்டு சென்றார் அந்த நடிகர்.

திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயதார்த்தம் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் என்னை விட்டு செல்கிறார் என்று சில பல சட்ட போரட்டங்களை முன்னெடுத்தார். ஆனால், திருமணத்திற்கு முன்பு நடக்கும் எந்த நிகழ்வும் திருமணம் ஆகாது என்பதால் பின் வாங்கினார்.

இதனால், மனமுடைந்து போனார். ஆனாலும், மீண்டும் ஆக்டிவாக துடிப்புடன் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்து விட்டார். இந்நிலையில், பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வரவே உடனே சம்மதம் தெரிவித்துள்ளார் அம்மணி.

போட்டியில் கலந்து கொள்ள தேவையான அனைத்து ஃபார்மாலிட்டிகளும் முடிந்து விட்ட நிலையில் இந்த நிகழ்ச்சிக்குள் நடக்கும் கண் கட்டி வித்தைகள் பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும். எனவே புகழுக்கும், பணத்திற்கும் ஆசைப்பட்டு இருக்கும் கொஞ்ச நஞ்ச பெயரையும் டேமேஜ் செய்து கொள்ள நடிகை விருப்பமில்லாமல் டாடா காட்டிவிட்டார் நடிகை.

எனவே அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என கறாராகச் சொல்லி விட்டாராம்.

LATEST News

Trending News