பிரபல இயக்குனருடன் மீண்டும் இணையும் இசையமைப்பாளர் அனிருத் - ஹீரோ யாருனு தெரியுமா

பிரபல இயக்குனருடன் மீண்டும் இணையும் இசையமைப்பாளர் அனிருத் - ஹீரோ யாருனு தெரியுமா

3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானார்.

இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், அடுத்தடுத்து அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோரது படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார்.

இவர் இசையில் தற்போது இந்தியன் 2, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், டான், தளபதி 65 உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத், அடுத்ததாக ஷங்கர் இயக்க உள்ள தெலுங்கு படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடிக்க உள்ளார். ஏற்கனவே இயக்குனர் ஷங்கரும், இசையமைப்பாளர் அனிருத்தும் இந்தியன் 2 படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

LATEST News

Trending News