சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு

பண்டிகை விடுமுறை என்றாலே எப்போதும் ரசிகர்கள் டிவியில் எந்த புதிய படம் வரப்போகிறது என்று தான் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.

அந்த வகையில் 14 ஏப்ரல், தமிழ் புத்தாண்டு அன்று டிவி சேனல்கள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது படங்களாக ஒளிபரப்பு செய்ய இருக்கின்றன.

விஜய் டிவியில் புஷ்பா 2 படம் வர இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதை தொடர்ந்து தற்போது சன் டிவியும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

அஜித்தின் விடாமுயற்சி படம் தான் சன் டிவியில் வர இருக்கிறது. 14 ஏப்ரல் மாலை 6.30 மணிக்கு இந்த படம் திரையிடப்படுகிறது.

இந்த அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

LATEST News

Trending News