5 நிமிடத்திற்கு 5 கோடி.. அந்த விஷயத்திற்காக நடிகை தமன்னாவை நாடும் இயக்குநர்கள்
நடிகை தமன்னா கதாநாயகியாக நடிப்பதை தாண்டி, தொடர்ந்து சிறப்பு பாடல்களுக்கு கிளாமர் நடனமாடி வருகிறார். ரஜினியின் ஜெயிலர், பாலிவுட்டில் வெளிவந்த ஸ்ட்ரீ 2 ஆகிய படங்களில் தமன்னாவின் நடனம் பெரிதளவில் பேசப்பட்டது.
இதன்பின் பாலிவுட்டில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட தமன்னாவிற்கு வாய்ப்புகள் தேடி வருகிறது. தமன்னா ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடினால் படத்திற்கு வரவேற்பு கிடைக்கிறது என்பதால், இயக்குநர்களும் அவரை நாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது ரைடு 2 என்கிற பாலிவுட் படத்தில் நடிகை தமன்னா சிறப்பு பாடலுக்கு கிளாமராக நடனமாடியுள்ளார். இந்த பாடல் சமீபத்தில் வெளிவந்து வைரலாகியுள்ளது.
இந்த 5 நிமிட பாடலில் நடனமாட ரூ. 5 கோடி சம்பளம் தமன்னா வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.