காவாலா ஆட்டத்தை மிஞ்சும் தமன்னாவின் நாஷா பாடல்.. அடேங்கப்பா நடனத்தை பாருங்க

காவாலா ஆட்டத்தை மிஞ்சும் தமன்னாவின் நாஷா பாடல்.. அடேங்கப்பா நடனத்தை பாருங்க

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் அயன், பையா, வீரம், பாகுபலி, சுறா, தேவி, அரண்மனை- 4,ஜெயிலர் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர்.

நடிப்பை தாண்டி நடனத்திலும் கவனம் செலுத்தி வரும் தமன்னா. ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் நடனமாடி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

காவாலா ஆட்டத்தை மிஞ்சும் தமன்னாவின் நாஷா பாடல்.. அடேங்கப்பா நடனத்தை பாருங்க | Tamannaah Dance Clip Goes Viral

அதை தொடர்ந்து, ஸ்ட்ரீ 2' படத்தில் 'ஆஜ் கி ராத்' என்ற பாடலுக்கு நடனமாடி உள்ளார். தற்போது இவருடைய நடனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வரும் நிலையில், அடுத்து தமன்னா ஒரு படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.

அதாவது, அஜய் தேவ்கன் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ரெய்டு. இப்படத்தின் இரண்டாம் பாகமான ரெய்டு 2 திரைப்படம் வரும் மே 1 - ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தில் வரும் 'நாஷா' பாடலுக்கு சிறப்பு நடனமாடி உள்ளார். தற்போது, இது தொடர்பான அறிவிப்பு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.    

LATEST News

Trending News