இது பெருசா இருக்கும் நடிகர்களுடன் தான் நடிப்பேன்.. தனக்கு தானே சூனியம் வைத்துக்கொண்ட நமீதா..!

இது பெருசா இருக்கும் நடிகர்களுடன் தான் நடிப்பேன்.. தனக்கு தானே சூனியம் வைத்துக்கொண்ட நமீதா..!

தமிழ் சினிமாவில் கவர்ச்சியில் சில நடிகைகள் மட்டுமே வெகு சீக்கிரத்தில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விடுகின்றனர்.

அந்த வகையில் சில்க் ஸ்மிதா, ஷகிலா, குஷ்பு, மந்த்ரா, ஷர்மிலி, அனுராதா, குயிலி, டிஸ்கோ சாந்தி, சோனா, புவனேஸ்வரி போன்றவர்களை சொல்லலாம்.

ஏனெனில் ரசிகர்களின் கண் பார்வை நிலைத்து நிற்கும் விதமான, முன்னழகை தூக்கலாக காட்டி, படங்களில் அதையே தங்களது மூலதனமாக வைத்து, முன்னுக்கு வந்து விடுகின்றனர்.

அழகான முகம் கொண்ட நடிகைகள் முகத்தை காட்டி ரசிகர்களை வசீகரிக்கின்றனர். கட்டழகு உடல் அழகியான நாங்கள், எங்கள் முன்னழகை காட்டி ரசிகர்களின் கவனத்தை பெறுகிறோம் என்பது கவர்ச்சி நடிகைகளின் வாதமாக இருக்கிறது.

ஆபாசம் கவர்ச்சி இரண்டுக்குமே இன்றைய சினிமா உலகில் வித்யாசம் இல்லாமல் போய் விட்டது. கவர்ச்சி என்ற பெயரில், கதாநாயகிகளே ஆபாசமாக நடிக்கும்போது, கவர்ச்சி நடிகைகள் நிலை பரிதாபம்தான்.

அந்த வகையில் மற்றும் ஒரு கவர்ச்சி நாயகியாக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்தான் நமீதா. தமிழில் எங்கள் அண்ணா என்ற படம் மூலம் அறிமுகமானார்.

விஜயகாந்த், பாண்டியராஜன், பிரபுதேவா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தில், விஜயகாந்த் ஜோடியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து சரத்குமார், சத்யராஜ் போன்ற நடிகர்களுடன் நடித்த நமீதா, அடுத்து தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களிலும் நிறைய நடித்தார்.

தமிழில் அழகிய தமிழ் மகன், புலி முருகன், ஏய், நான் அவன் இல்லை, வியாபாரி, ஜகன் மோகினி, ஆணை, பம்பரக்கண்ணாலே, இங்கிலீஸ்காரன், சண்டை, சாணக்யா, பாண்டி, மகா நடிகன், தீ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு உடல் எடை பலமடங்கு பெருத்துப் போனதால், சினிமா வாய்ப்புகளை இழந்த நடிகை நமீதா, தனது காதலர் வீரேந்திர சவுத்திரியை திருமணம் செய்துக்கொண்டு, இரட்டை பிள்ளைகளுக்கு தாயானார்.

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சீசனில் நமீதா பங்கேற்றார். அதன்பிறகு அதிமுகவிலும், அதனை விட்டு வெளியேறி தற்போது பாஜக கட்சியில் இருந்து வருகிறார் நமீதா.

கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட கனமழையில் வீட்டுக்குள் 6 அடி தண்ணீருக்குள் சிக்கிக்கொண்ட நமீதா, பிள்ளைகளுடன் பத்திரமாக மீட்கப்பட்டது ஊடகங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் நமீதா தமிழ் சினிமாவில் பெரியதாக சாதிக்க முடியாமல் போக காரணம், அவர் நடிக்க வந்த புதிதில் சத்யராஜ், சரத்குமார் போன்ற உயரமான நடிகர்களுடன் மட்டுமே நடிப்பேன் என கண்டிசன் போட்டார்.

அதுமட்டுமின்றி, ரசிகர்களின் மனதில் விரைவில் இடம்பிடிக்க வேண்டும் என்ற ஆசையில், அளவுக்கு மீறிய கவர்ச்சியில் நடித்து, குடும்பத்துடன் படம் பார்க்க வந்தவர்களை முகம் சுளிக்கவும் வைத்தார்.

அதிலும், உயரம் பெருசா இருக்கும் நடிகர்களுடன் தான் நடிப்பேன் என்று கண்டிசன் போட்டு தனக்கு தானே சூனியம் வைத்துக்கொண்டார் நமீதா என்று சினிமா ரசிகர்கள் இப்போதும் வருத்தப்படுகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES