மீண்டும் திருமணம் செய்யும் பிக்பாஸ் வனிதா..! மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
இன்று திரை உலகில் மறுமணம் என்பது சர்வ சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. அந்த வகையில் வாயாடி வனிதா அக்கா மீண்டும் திருமணம் செய்து கொள்ள போவதாக பரபரப்பான தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது.
நடிகை வனிதா விஜயகுமார், நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளாவின் மகள் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இவர்கள் குடும்பமே திரை உலகில் இருப்பதால் இவர் மிக எளிதில் திரை உலகப் பிரவேசத்தை செய்திருந்தார்.
சந்திரலேகா படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு மேலும் பட வாய்ப்புகள் வந்து சேர வில்லை. இதனை அடுத்து இவர் யூடியூப் சேனலை நடத்தி வந்தார். மேலும் இவர் பிக் பாஸ் ஷோவில் கலந்து கொண்ட பிறகு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராக மாறிவிட்டார்.
பிக் பாஸ் சீசன் டைட்டில் வின்னர் ஆக இவர் இல்லை என்றாலும் மக்கள் விரும்பக் கூடிய வகையில் இவரது பேச்சு இருந்தது. அது மட்டுமல்லாமல் நித்தம் நித்தம் பிக்பாஸ் வீட்டுக்குள் இவர் அடித்த லூட்டிகள் பற்றி மக்கள் பேசாத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு தன் வாயால் முன்னுக்கு வந்தவர்.
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வந்து சேர்ந்தது. இதனை அடுத்து இவர் பீட்டர் பால் என்ற நபரை திருமணம் செய்து கொண்டு மக்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதன் பின் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர். இந்நிலையில் பீட்டர் பால் உடல் நலம் குறைவால் மரணம் அடைந்து விட்டார்.
அண்மையில் நடந்த பிக் பாஸ் சீசன் 7ல் வனிதாவின் மகள் ஜோவிகா கலந்து கொண்டு அம்மாவை போலவே பெரியவர்களிடம் மட்டும் மரியாதை இல்லாமல் பேசியது மக்களின் மத்தியில் தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை என்பதை நிரூபித்து விட்டதாக கூறியிருந்தார்கள்.
இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் பேசிய வனிதாவிடம் தொகுப்பாளர் வில்லங்கமான கேள்விகளை கேட்க ஆரம்பித்தார். குறிப்பாக திருமணம் பற்றி பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டது.
இந்த கேள்விகளை கேட்ட வனிதா அதற்கு உரிய பதிலை மிகச்சிறப்பான முறையில் கோபப்படாமல் கூறியது பலர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வரை சட்டப்படி இரண்டு முறை தான் திருமணம் செய்து கொண்டதாகவும் மூன்றாவது முறையும் திருமணம் செய்வேன் என்று கூறிய கருத்துதான் பரவலாக இப்போது பேசும் பொருளாகி விட்டது.
அத்தோடு மூன்றாம் திருமணம் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கு என்று கூறியவர் மாப்பிள்ளை கருப்பாக இருக்கணும் இல்ல என கூற சிகப்பா இருக்க வேண்டுமா? என்று தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு பச்சையாக இருக்கணும். அதாவது குபேரன் போல பச்சை நிறத்தில் இருக்க வேண்டும் அப்படி ஒருவரை தான் தான் தேடிக் கொண்டு வருவதாக சற்று காண்டாகி பதிலளித்தார்.
அதுமட்டுமல்லாமல் எப்போது பேட்டி எடுத்தாலும் திருமணம் பற்றிய கேள்விகளைத் தான் கேட்கிறீர்கள் என்று கோபத்தோடு பேசிய பேச்சு தற்போது அனைவர் மத்தியிலும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதனைஅடுத்து இவரது ரசிகர்கள் அக்கா எத்தனை திருமணம் செய்தா என்ன? அவங்க டில்லான ஆளுடா.. என்றபடி பேசி வருகிறார்கள்.