வற்புறுத்தலில் தமன்னா பெற்றோர்.. அம்பலமான காதல் விவாகாரம்!
தமன்னா வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் அறிமுகமானவர் தான் நடிகை தமன்னா.
முதல் திரைப்படம் இவருக்கு சரியான வரவேற்பை எடுத்து கொடுக்காவிட்டாலும் இவரின் அழகிற்காக வாய்ப்புகள் குவிந்து கொண்டிருந்தன.
காலப்போக்கில் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக மாறி விட்டார்.
இதனை தொடர்ந்து தற்போது சமிபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான “ஜெய்லர் ” படத்தில் நடித்திருந்தார். இதற்காக 3 கோடி வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் 33 வயது ஆகும் தமன்னாவை விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு வீட்டார் பிரச்சினை செய்து வருகிறார்கள்.
பாலிவுட் நடிகர் விஜயிற்கும் தமன்னாவிற்கு ஏற்கனவே ஒரு காதல் தொடர்பு இருப்பதால் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என கூறப்படுகின்றது.
இந்த செய்தி கேட்ட தமன்னா ரசிகர்கள் கொஞ்சம் மன வருத்தத்தில் இருக்கிறார்கள்.
சக நடிகர்கள் இதற்காக தமன்னாவிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் திருமண நாளுக்காக காத்திருப்பதாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.