நானே ரெட் கார்டு கொடுத்து எலிமினேட் செய்வேன்: கமல்ஹாசன் எச்சரிக்கை யாருக்கு?

நானே ரெட் கார்டு கொடுத்து எலிமினேட் செய்வேன்: கமல்ஹாசன் எச்சரிக்கை யாருக்கு?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான அடுத்த புரமோ வீடியோவில், ‘தேவைப்பட்டால் நானே ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்ற முடியும் என்று கமல்ஹாசன் போட்டியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை போட்டியாளர்களுக்கு சில அடிப்படை விதிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதும் அந்த விதிமுறைகளை கண்டிப்பாக போட்டியாளர்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதும் தெரிந்ததே.

ஆனால் எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் விதிமுறைகள் அதிகம் மீறப்படுவதாக பொதுவான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில் இது குறித்து கமல்ஹாசன் இன்று அனைத்து போட்டியாளர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் இதுகுறித்து கூறியபோது, ‘ நிகழ்ச்சி ஆரம்பித்து 30 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் ஒரு டாஸ்கிற்கு கூப்பிட்டால் தாமதமாக வருகிறீர்கள். இவர்கள் என்ன செய்துவிடப் போகிறார்கள் என்ற ஒரு அலட்சியம் போட்டியாளர்களுக்கு உள்ளது. இது நீங்கள் இந்த நிகழ்ச்சிக்கு செய்யக்கூடிய ஒரு உபகாரம் அல்ல என்று கமல்ஹாசன் கூறினார்.

அதன் பின்னர் ரகசியமாக பேசுதல், எழுதி காட்டுவது, வேறு மொழிகளில் பேசுவது என நீங்கள் விதிகளை தொடர்ந்து அவமதித்து நடப்பதால், தேவைப்பட்டால் நானே இதற்கு ரெட் கார்டு கொடுத்து எலிமினேட் செய்யமுடியும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த எச்சரிக்கையை கேட்டு போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் காட்சியுடன் இந்த வீடியோ முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து இன்றைய எபிசோடு விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES