4 வருடம் அட்ஜெஸ்ட்மெண்ட்.. என் உடம்பை பார்த்து அவர் சொன்ன வார்த்தை.. சீரியல் நடிகை கிருத்திகா பகீர்..!
சீரியல் நடிகை கிருத்திகா பலமுறை தனது கணவரை அட்ஜெஸ்ட் செய்தும் சரியாக வராததை அடுத்து அவரது கணவரை ஏன் விவாகரத்து செய்தேன் என்பது பற்றி கூறிய தகவல்கள்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மெட்டி ஒலி என்ற சீரியலின் மூலம் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்திய சீரியல் நடிகை கிருத்திகா பற்றி உங்களுக்கு அதிக அளவு தெரிந்து இருக்கலாம்.
இவர் பல மெகா சீரியல்களில் நடித்து தனக்கு என்று ஒரு மிகப்பெரிய ரசிகர் வட்டாரத்தை பெற்றிருப்பவர். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளி வந்த முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் இவருக்கு நல்ல ஃபேமஸை பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் நன்கு ரீச் ஆனது இதற்கு காரணம் இந்த சீரியலில் இவர் வில்லியாக நடித்தது தான்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கிருத்திகா தனது விவாகரத்து குறித்தும் தன் மகன் பற்றியும் வெளிப்படையாக சில விஷயங்களை பேசி அனைவரையும் அதிரவிட்டார்.
அந்த வகையில் அவர் பேசும் போது தனக்கு எட்டு வருடங்களுக்கு முன்பே விவாகரத்து ஆகிவிட்டதாக கூறி இருக்கும் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் நடிக்கக்கூடிய சமயத்தில் சுமார் 83 கிலோ இருந்ததாக சொன்னார்.
அது மட்டுமல்லாமல் அந்த சீரியல் அக்கா வேடத்தில் நடிக்க இந்த தோற்றம் இப்படியே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் என் கணவர் என் உடம்பை பார்த்து இப்படி பெருசா இருக்கே என்று அடிக்கடி சண்டை போட்டார்.
ஒரு கட்டத்தில் இந்த சண்டை மிகப்பெரிய அளவில் வெடித்ததை அடுத்து இருவரும் சேர்ந்து பரஸ்பர முடிவை எடுத்து பிரிந்து விட்டோம் என்று கிருத்திகா கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியது.
மேலும் தனக்கு ஒரு மகன் இருப்பதால் யாராவது தந்தையை பற்றி கேட்டால் அவன் மனம் கஷ்டப்படும் என்று நினைத்தேன். ஆனால் அந்த கவலை தற்போது இல்லை எனது அண்ணனே இவனுக்கு அப்பா ஸ்தானத்தில் இருந்து வழி நடத்துகிறான்.
நடிகை கிருத்திகா ஒன்பது மாத கர்ப்பிணியாக இருக்கும் போது தான் முந்தானை முடிச்சு சீரியல் நடித்த போது தனக்கு மகன் பிறந்ததை அடுத்து மூன்று வாதங்கள் ஓய்வு எடுக்க வேறு ஒருவர் நடித்தார்கள் என்பதையும் கூறுகிறார்.
அத்தோடு எனக்கும் என் கணவருக்கும் பல பிரச்சனைகள் ஏற்பட்டதை அடுத்து என் அம்மாவும் சரியில்லை என்று கூறிய உடன் தான் நான் இந்த முடிவுக்கு வந்து அவரை விட்டு பிரிந்து விட்டேன். சுமார் நான்கு வருடங்கள் அட்ஜஸ்ட் செய்து தான் அவரோடு வாழ்ந்திருக்கிறேன்.
என்னிடம் ஒரு கட்டத்தில் எனக்குத் தேவையில்லை என்ற ஒரு முடிவை எடுக்க அவர்தான் வைத்தார். அவரைப் பற்றி நான் எந்த விமர்சனமும் செய்ய விரும்பவில்லை என ஓப்பனாக பேசி பலரையும் கவர்ந்திருக்கிறார்.
இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.