'இந்த ராணி எப்போதுமே உங்களுக்குத்தான்; 'PS 2' இசை விழாவில் த்ரிஷா ..!
பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் குந்தவை டைரக்டரில் நடித்த நடிகை த்ரிஷா பேசியதாவது:
இந்த படம் குறித்து நான் நிறைய பேச வேண்டும் என்று குறிப்புகள் எடுத்து வந்தேன், ஆனால் நிறைய பேர் அதை பேசி விட்டனர். இருந்தாலும் நான் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இங்கு சொல்ல விரும்புகிறேன். குந்தவை கேரக்டரில் நான் நடித்து ’பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் வெளியே வந்த போது எனக்கு தினமும் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் வந்தன.
அவை அனைத்துமே இளம் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் குந்தவை போலவே ட்ரெஸ் செய்து அனுப்பி இருந்தனர். அந்த புகைப்படங்களில் ஒரு சிலவற்றை நான் சமூக வலைதளங்களில் பதிவு செய்தேன். அதில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய ஒரு புகைப்படம் என்றால் பிறந்த ஒரு சில நாட்களே ஆன குழந்தைக்கு குந்தவை மேக்கப் போட்டு புகைப்படம் எடுத்து அனுப்பி இருந்தார்கள். இதுபோல் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியங்கள் இந்த படத்தில் நடித்ததின் மூலம் கிடைத்தது.
’குந்தவை கேரக்டர் இந்த அளவுக்கு வைரல் ஆனதற்கு நீங்கள் தான் காரணம், இந்த ராணி எப்போதுமே உங்களுக்கு தான்’ என்று நடிகை த்ரிஷா பேசினார்