நடிகர் மரணம்.. வள்ளியின் வேலன் சீரியல் அடுத்த ரத்னவேல் இவர்தான்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் வள்ளியின் வேலன். இதில் நடிகர் சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் நடித்து வருகின்றனர். நிஜத்திலேயே காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர்கள் தற்போது சீரியலில் ஜோடியாக நடித்து வருகின்றனர்.
இந்த சீரியலில் ரத்னவேலு கதாபாத்திரத்தில் முதலில் சாக்ஷி சிவா என்பவர் நடித்து வந்தார். அவர் விலகிய பிறகு பிரபல நடிகர் ஸ்ரீதர் அந்த ரோலில் நடித்து வந்தார்.
நடிகர் ஸ்ரீதர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பால் காலமானார். அதனால் அடுத்து ரத்னவேலு ரோலில் யார் நடிக்கப்போவது என்கிற எதிர்பார்ப்பும் ஒருபக்கம் இருக்கிறது.
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் இதற்கு முன் பல சீரியல்களில் நடித்து இருக்கும் கிரிஷ் என்பவர் தான் இனி ரத்னவேலுவாக நடிக்க போகிறாராம்.