குழந்தைகள் குறித்து தவறான தகவலை பரப்பிய ரோபோ சங்கர் மகள்.. தமிழக அரசு அதிரடி

குழந்தைகள் குறித்து தவறான தகவலை பரப்பிய ரோபோ சங்கர் மகள்.. தமிழக அரசு அதிரடி

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரோபோ ஷங்கர். இப்போது வெள்ளித்திரையில் முன்னணி காமெடியனாக கலக்கி வருகிறார்.

இவரது மகள் இந்திரஜா, விஜய்யின் பிகில் படத்தின் மூலம் நடிக்க தொடங்கி சில படங்களில் நடித்தார். அதன் பின், தனது முறைமாமனை திருமணம் செய்துகொண்ட இந்திரஜாவிற்கு அண்மையில் குழந்தை பிறந்தது.

குழந்தைகள் குறித்து தவறான தகவலை பரப்பிய ரோபோ சங்கர் மகள்.. தமிழக அரசு அதிரடி | Indraja Wrong Information On Children Policy

இந்நிலையில், இந்திரஜா மற்றும் கார்த்திக் அண்மையில் தங்களது யூடியூப் பக்கத்தில், தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனைத் திறன் குறைந்துள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிந்தனைத் திறன் வெகுவாக குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

மேலும், குழந்தை பிறந்தவுடன் அங்கன்வாடியில் சேர்க்க அரசு திட்டம் வகுத்துள்ளது எனவும் இந்தரஜா தம்பதியினர் கூறியிருந்தனர்.

குழந்தைகள் குறித்து தவறான தகவலை பரப்பிய ரோபோ சங்கர் மகள்.. தமிழக அரசு அதிரடி | Indraja Wrong Information On Children Policy

தற்போது, தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனை திறன் குறைத்துவிட்டது என கூறப்படுவது ஆதாரமற்றது. ஹெகுரு பயிற்சி தொடர்பாக இந்திரஜா வெளியிட்ட வீடியோவில் பல தவறான தகவல்கள் இருப்பதாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளனர். 

LATEST News

Trending News