ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் சந்தானத்தின் 3 படங்கள்?

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் சந்தானத்தின் 3 படங்கள்?

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நடிகர் சந்தானம் நடித்துள்ள 3 படங்களை ஓடிடி-யில் வெளியிட உள்ளார்களாம்.

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம்வந்த சந்தானம், தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடித்துள்ள சபாபதி, சர்வர் சுந்தரம், டிக்கிலோனா ஆகிய படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இந்த படங்களை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சபாபதி, சர்வர் சுந்தரம், டிக்கிலோனா படங்களின் போஸ்டர்

இதில் சர்வர் சுந்தரம் படத்தை ஆனந்த் பால்கியும், டிக்கிலோனா படத்தை கார்த்திக் யோகியும், சபாபதி படத்தை ஸ்ரீனிவாசராவும் இயக்கி உள்ளனர். இப்படங்களின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

LATEST News

Trending News

HOT GALLERIES