இதுதான் ஹிப், அது அப்.. வைரலாகும் வரலட்சுமி சரத்குமாரின் டான்ஸ் வீடியோ
தமிழ் சினிமாவின் நாட்டாமை சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். சிம்புவுடன் போடா போடி படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
அதன்பின் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 என தொடர்ந்து தமிழில் நடித்தவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வந்தார்.
சமீபத்தில் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்ட வரலட்சுமி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், கோவை சரளா ஹிப் இது அப் இது என்று நடனம் ஆடும் காட்சிக்கு ரீல்ஸ் செய்து அதனை அவரது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,