நைட் பார்ட்டி!! குடியால் மழுங்கிப்போன கயல் சீரியல் நடிகர்!! விளாசும் பிரபலம்...
சன் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்களில் ஒன்று கயல். கடந்த 2021ல் இருந்து ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலில் சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக், ஐஸ்வர்யா ரவிச்சந்திரன், கோபி, அபிநவ்யா, முரளி ராஜ், அவினாஷ், பிர்லா போஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்த சீரியலில் கயலின் அண்ணனாக மூர்த்தி என்ற ரோலில் நடித்து வருபவர் தான் அய்யப்பன்.
அவர் மனைவி பிந்தியா சமீபத்தில் தன் கணவர் தன்னை தினமும் அடித்து உதைத்து துன்புறுத்தி வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். கயல் சீரியல் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிந்தியா, கடந்த 3 ஆண்டுகளாக என் குழந்தையை கவனித்துக் கொள்வதில்லை என்னையும் கவனித்துக் கொள்வதில்லை, செலவிற்கு பணமும் தருவதில்லை, எப்போது பணம் கேட்டலும் இல்லை என்று கூறுகிறார்.
தினமும் டோப் அடித்துவிட்டு ஒருவித மயக்கத்தில் இருக்கிறார். வீட்டு வந்தால் என்னையும் என் குழந்தையையும் அடிப்பது மட்டுமில்லாது கெட்டவார்த்தைகளால் திட்டுகிறார். என் அப்பா அம்மாவிற்கு கால் செய்து நான் உங்கள் மகளை விவாகரத்து செய்யப்போகிறேன் என்று கூறுகிறார். விவாகரத்துக்கு என்ன காரணம் என்று கேட்டால் அதையும் கூறுவதில்லை. இதற்குமுன் அவர் பல சீரியல்களில் நடித்துள்ளார்.
அப்போது எல்லாம் அவர் அப்படி நடந்து கொண்டதில்லை, கயல் சீரியலில் நடித்துத்தான் என் வாழ்க்கையே போச்சு, வீட்டு வாடகை கட்டவேண்டும், குழந்தையை பார்க்க வேண்டும், 3 மாதமாக நான் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பதாக கூறி ரோட்டில் கூச்சல் போட்டுள்ளார். இதுகுறித்து தமிழா தமிழா பாண்டியன் அளித்த பேட்டியொன்றில் சில கருத்துக்களை கூறியுள்ளார்.
அதில், நடிகர் நடிகைகளின் பொழுதுபோக்கே மது விருந்துகள் தான். ஈசிஆரில் கூடி மதுபானம் அருந்தி விடியவிடிய பார்ட்டி செய்து பின் விடிந்தப்பின் சென்றுவிடுவார்கள். அதைத்தான் அய்யப்பனும் செய்கிறார். மது போதையால் அவரின் புத்தி மழுங்கி போய்விட்டது.
தினமும் குடித்துகுடித்து அடிமையாகிவிட்டால் என்ன செய்யமுடியும் அவரை மனநல மருத்துவரிடம் ஒரு மாத காலம் சிகிச்சைக்கு அனுப்பி சிகிச்சை கொடுக்க வேண்டும்.அப்போது தான் நல்ல நிலைக்கு வருவார். அய்யப்பன் நடித்து வரும் சீரியலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.