'வாழ்த்துக்கள், நீ கர்ப்பமா இருக்க.. சமந்தாவின் 'யசோதா' டீசர்

'வாழ்த்துக்கள், நீ கர்ப்பமா இருக்க.. சமந்தாவின் 'யசோதா' டீசர்

பிரபல நடிகை சமந்தா நடித்த ’யசோதா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த டீசரில் மருத்துவமனைக்கு வந்த சமந்தாவிடம் டாக்டர், ‘நீ கர்ப்பமாக இருக்கிறாய் வாழ்த்துக்கள் என்று கூறி, முதல் மூன்று மாதம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும், சரியாக நேரத்துக்கு சாப்பிட வேண்டும் என்றும், நன்றாக தூங்க வேண்டும் என்றும், நடக்கும் போது ரொம்ப கவனமாக பார்த்து நடக்க வேண்டும் என்றும், வெயிட் ஏதும் தூக்காமல் எளிய வீட்டு வேலைகளை மட்டும் செய்ய வேண்டுமென்றும், வேலை செய்யும் போது கீழே விழுந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டும் என்றும், உடனடியாக அதிர்ச்சி அடைய கூடாது என்றும் மருத்துவர் அறிவுரை கூறுகிறார்.

ஆனால் டாக்டர் அறிவுரை கூறிய அனைத்திற்கும் எதிர்மறையான சம்பவங்கள் சமந்தாவின் வாழ்வில் நிகழ்கிறது. இதனால் அவருடைய கர்ப்பம் என்ன ஆனது? அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன என்பதை விளக்குவது தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்பது இந்த டீசரில் இருந்து தெரியவருகிறது.

சமந்தா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், முரளி சர்மா, சம்பத்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஹரி - ஹரிஸ் இயக்கத்தில் மணிசர்மா இசையில் உருவாகும் இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES