பரபரப்பான ஷூட்டிங்குக்கு நடுவே ரொமான்டிக் பிரேக்.. மாலத்தீவில் கணவருடன் குஷி மூடில் நட்சத்திரா!

பரபரப்பான ஷூட்டிங்குக்கு நடுவே ரொமான்டிக் பிரேக்.. மாலத்தீவில் கணவருடன் குஷி மூடில் நட்சத்திரா!

சென்னை: சின்னத்திரை உலகில் தனது துறுதுறுப்பான பேச்சு, கொள்ளை கொள்ளும் புன்னகை மற்றும் இயல்பான நடிப்பால் பல லட்சம் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர் நடிகை நட்சத்திரா நாகேஷ். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபல தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கிய இவர், வெள்ளித்திரையில் சேட்டை, வாயை மூடி பேசவும், புலிவால், இரும்பு குதிரை போன்ற பல ஹிட் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துத் தனக்கென ஒரு இடத்தைப்பிடித்தார்.

Nakshathra Nagesh photos

நடிகை நட்சத்திரா நாகேஷ்: வெள்ளித்திரையைத் தாண்டிச் சின்னத்திரையில் இவர் காலடி எடுத்து வைத்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் தொடரில் 'சரஸ்வதி' என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். இத்தொடர் இவரை மேலும் பிரபலமாக்கி பட்டிதொட்டியெங்கும் மாபெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது. இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்களின் விருப்பமான நாயகியாக மாறிய நட்சத்திரா, தற்போது அதே விஜய் தொலைக்காட்சியில் 'அழகே அழகு' என்ற தொடரில் நாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.

Nakshathra Nagesh photos

மாலத்தீவில் ஜாலி வெக்கேஷன்: தொடர்ச்சியான சீரியல் ஷூட்டிங், விளம்பரப் படங்கள் என மிகவும் பரபரப்பாக இயங்கி வந்த நட்சத்திரா நாகேஷ், தற்போது தனது பிஸி ஷெட்யூலுக்குச் சிறிய பிரேக் விட்டுவிட்டுத் தனது கணவருடன் தீவு நாடான மாலத்தீவுக்கு ஜாலியாக சுற்றுலா சென்றுள்ளார். அங்கு நீலக் கடலின் நடுவே, போட்டில் பறந்தபடி கணவருடன் ரொமான்டிக் செல்ஃபி எடுத்தும், கைகளை விரித்து கடலின் அழகையும் தென்றல் காற்றையும் ரசித்தபடியும் எடுத்துக்கொண்ட க்யூட்டான புகைப்படங்களைச் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வெள்ளை நிறத்தில் நீல நிறப் பூக்கள் பதித்த மாடர்ன் உடையில், ஸ்டைலிஷான சன்கிளாஸ் அணிந்து நட்சத்திரா போஸ் கொடுத்துள்ள இந்த லேட்டஸ்ட் வெக்கேஷன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் தீயாய் பரவி ரசிகர்களின் லைக்குகளையும் கமெண்டுகளையும் குவித்து வருகின்றன.
 

LATEST News

Trending News