பாக்ஸ் ஆபிஸ்: மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் இறுதி வசூல்
Meesaya Murukku 2 final collection: ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க.
மீசைய முறுக்கு 2
இண்டிபெண்டெண்ட் ஆர்டிஸ்ட்டாக தனது பயணத்தை தொடங்கி, அதன்பின் இசையமைப்பாளராக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஹிப் ஹாப் ஆதி. இதனை தொடர்ந்து கடந்த 2017-ஆம் ஆண்டு இவர் இயக்கி, ஹீரோவாக நடித்து வெளிவந்த படம் மீசைய முறுக்கு. தனது வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பின் மீசைய முறுக்கு 2 திரைப்படத்தை இயக்கினார். கடந்த மாதம் திரைக்கு வந்த இப்படத்தில் ஆதியுடன் இணைந்து சைத்ரா அச்சர், ரம்யா ரங்கநாதன், கெத்திகா ஷர்மா, கருணாஸ், நாசர், பாபா பாஸ்கர், ஹர்ஷத் கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இறுதி வசூல்
கானா பாடகர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க, மீசைய முறுக்கு 2 திரைப்படம் முதல் நாளிலிருந்தே வசூலில் வேட்டையாடி வந்தது. இந்த நிலையில், இப்படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள மீசைய முறுக்கு 2 திரைப்படம் மொத்தமாக ரூ. 55 கோடி வசூல் செய்துள்ளது.
