'தலைவர் நிரந்தரம்'.. முன்பதிவில் வசூல் வேட்டை நடத்தும் ரஜினியின் ஜெயிலர் 2

'தலைவர் நிரந்தரம்'.. முன்பதிவில் வசூல் வேட்டை நடத்தும் ரஜினியின் ஜெயிலர் 2

Rajinikanth Jailer 2 Pre Booking Collection: ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படம் 15-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், முன்பதிவில் வசூல் வேட்டையாடி வருகிறது. அந்த விவரத்தை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க.

ஜெயிலர் 2

தங்களுக்கு பிடித்த நடிகர்கள், நடிகைகள் அல்லது தங்களுக்கு பிடித்த Genre என தனித்தனியாக தங்களுக்கு பிடித்த விஷயங்களை வைத்து, அந்தந்த திரைப்படங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருப்பார்கள். ஆனால், ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. இதற்கு காரணம். இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்றி ஒற்றை நபர்தான்.

 

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்தின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில், எஸ்.ஜே. சூர்யா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி சரோஃப், வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன், சுராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், ஹ்ரித்திக் ரோஷன் இப்படத்தில் சர்ப்ரைஸ் கேமியோ என கூறப்படுகிறது.

சமீபத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

முன்பதிவு

வசூல் ஜெயிலர் 2 திரைப்படத்தின் முன்பதிவு வசூல் குறித்த விவரங்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், ரிலீஸுக்கு இன்னும் 6 நாட்கள் இருக்கும் நிலையில், இதுவரை முன்பதிவில் இப்படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் நடைபெற்று வரும் முன்பதிவில் இப்படம் ரூ. 11 கோடி இதுவரை வசூல் செய்துள்ளது.

LATEST News

Trending News