பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் உலகளவில் மீசைய முறுக்கு 2 படம் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் உலகளவில் மீசைய முறுக்கு 2 படம் செய்துள்ள வசூல்

Meesaya Murukku 2 worldwide 11 days box office: மீசைய முறுக்கு 2 திரைப்படம் உலகளவில் 11 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

மீசைய முறுக்கு 2

தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு பிளாக்பஸ்டர் ஆக அமைந்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். TTT படத்தில் தொடங்கி வித் லவ், ஹாப்பி ராஜ், தாய் கிழவி, யூத், கருப்பு, பிளாஸ்ட், கட்டா குஸ்தி 2, DC, மண்டாடி என தொடர்ந்து பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன.

 

பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் உலகளவில் மீசைய முறுக்கு 2 படம் செய்துள்ள வசூல் | Meesaya Murukku 2 Worldwide 11 Days Box Office

இதனை தொடர்ந்து தற்போது மீசைய முறுக்கு 2 திரைப்படமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது. ஹிப் ஹாப் ஆதி இயக்கி, இசையமைத்து ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை சுந்தர் சி தயாரித்துள்ளார். இப்படத்தில் ரம்யா ரங்கநாதன், சைத்ரா, கெத்திகா ஷர்மா, கருணாஸ், நாசர், பாபா பாஸ்கர் மற்றும் ஹர்ஷத் கான் ஆகியோர் நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்

கடந்த மாதம் திரைக்கு வந்த இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் முதல் நாளிலிருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், மீசைய முறுக்கு 2 திரைப்படம் உலகளவில் 11 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 11 நாட்களில் உலகளவில் மீசையை முறுக்கு 2 திரைப்படம் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இந்த வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம், இப்படத்தின் இறுதி வசூல் எவ்வளவு வரும் என்று.

LATEST News

Trending News