அக்டோபர் 23-ல் வெளியாகும் ‘டெலிவரி பாய்’.. ஹீரோவாக அறிமுகமாகும் லியோ சிவகுமார்!
ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
நானி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் காளி வெங்கட், பிரிகிடா சாகா, ஜென்சன் திவாகர், துஷ்யந்த் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
‘அழகியே கண்ணே’ (2023), ‘சாமானியன்’ (2024), ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ (2024) ஆகிய படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த லியோ சிவகுமார், இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
அசாசி கிரியேஷன்ஸ் சார்பில் அமுதா லியோனி மற்றும் லெனின் மாதேஸ்வரன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.