படப்பிடிப்பில் பைக் ஓட்டி அசத்திய ஆல்யா மானசா.. அசத்தலான வீடியோ..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா.
அதே சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்து வந்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் ஐலா எனும் அழகிய பெண் குழந்தை சென்ற வருடம் பிறந்தது.
மேலும் தற்போது ராஜா ராணி 2 சீரியல் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை ஆல்யா மானசா.
இந்நிலையில் ராஜா ராணி 2 சீரியல் படப்பிடிப்பில் நடிகை ஆல்யா மானசா அசத்தலாக பைக் ஓட்டியுள்ளார்.
அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..