'எதுக்கு இன்னொரு கிசுகிசு': ப்ரியா பவானிசங்கருக்கு பதிலளித்த சதீஷ்

'எதுக்கு இன்னொரு கிசுகிசு': ப்ரியா பவானிசங்கருக்கு பதிலளித்த சதீஷ்

சதீஷ் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் ஒரே படத்தில் நடித்து வரும் நிலையில் இருவரும் டுவிட்டரில் பதிவு செய்த டுவிட்டுக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன .

அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் ‘ஹாஸ்டல்’ என்ற படத்தில் ப்ரியா பவானி சங்கர் மற்றும் சதீஷ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில மாதங்களுக்கு முன் டீசர் வெளியானது என்பதும் விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் பிரியா பவானி சங்கர் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்த சதீஷ் ’ யெஸ்! அதே தான்’ என்று கேப்ஷனாக பதிவு செய்திருந்தார்.ஆனால் அதன் பின் அந்த கேப்ஷனை டெலிட் செய்துவிட்டு ’ஹாஸ்டல் டேஸ்’ என்று மாற்றியிருந்தார் .

இதனை கவனித்த ப்ரியா பவானி சங்கர் தனது தனது டுவிட்டரில், ‘ஏதோ டெலிட் பண்ணி இருக்கீங்க ன்னு நம்ம மக்கள் பேசுகிறார்களே? என்று கேள்வி எழுப்பிய நிலையில், ‘எதுக்கு இன்னொரு கிசுகிசு’ என்று சதீஷ் பதிலளித்துள்ளார். பிரியா பவானி சங்கர் மற்றும் சதீஷின் இந்த பதிவுகள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

அசோக் செல்வன், ப்ரியா பவானி சங்கர், சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள ’ஹாஸ்டல்’ திரைப்படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். பாபோ சசில் இசையில், பிரவீன்குமார் ஒளிப்பதிவில், ராகுல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை டிரைடண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES