அனிருத் கையில் இத்தனை படங்களா? இன்னும் 2 வருடங்களுக்கு டிரெண்டிங் தான்..!
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் கையில் தற்போது 8 படங்கள் இருப்பதாகவும் அவை அனைத்தும் மாஸ் நடிகர்கள் படம் என்றும் தெரியவந்துள்ளது
சமீபத்தில் வெளியான கமல்ஹாசனின் ‘விக்ரம்’ மற்றும் ரஜினியின் ‘ஜெயிலர்’, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’, சிவகார்த்திகேயனின் ‘டான்’ உள்பட அனிருத் இசையமைத்த படங்கள் வசூலில் சாதனை செய்து வருவது மட்டுமின்றி இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன.
அந்த வகையில் தற்போது அனிருத் கையில் எட்டு படங்கள் வைத்திருக்கிறார். அவற்றில் அவை தளபதி விஜய்யின் ’லியோ’ உலக நாயகன் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ’தலைவர் 170’ மற்றும் ’தலைவர் 171’ அஜித்தின் ’விடாமுயற்சி ’ஆகிய படங்கள் உண்டு.
இது மட்டுமின்றி தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படம் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்திலும் அனிருத் தான் இசையமைப்பாளர். மேலும் கவின் நடிக்கும் அடுத்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார் என்று கூறப்படுகிறது.
மேற்கண்ட 8 படங்களும் அனிருத் கையில் இருப்பதால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அவரது பாடல் தான் ட்ரெண்டிங் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.