தளபதி 65 படத்தின் வில்லன் இவர்தானா - வெளியான செம மாஸ் தகவல்
மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் தனது 65வது படத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து இப்படத்திற்கும் அனிருத் விஜய்க்கு இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நன்றாக நடந்து முடிந்த, படக்குழு சமீபத்தில் சென்னைக்கு திரும்பினார்.
தளபதி 65 படத்தில் விஜய்யுடன் இணைந்து தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகி பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக துப்பாக்கி படத்தில் நடித்து நடிகர் வித்யுத் ஜம்வால் நடிக்கிறார் என தகவல் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்கவிருக்கிறார் என தற்போது மாசான தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.