நான் PERIODS-ல இருக்கேன்னு எவன் தூக்கி பாத்தான்.. கொடுமையான சம்பவம் குறித்து சந்தியா ஜாகர்லமுடி..

நான் PERIODS-ல இருக்கேன்னு எவன் தூக்கி பாத்தான்.. கொடுமையான சம்பவம் குறித்து சந்தியா ஜாகர்லமுடி..

ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த சந்தியா ஜாகர்லமுடி தமிழ், தெலுங்கு தொலைக்காட்சிகளில் முக்கிய பணியினை புரிந்தவர். தெலுங்கு சினிமாவில் நடித்து இருக்கக்கூடிய இவர் சிறு சிறு வேடங்களில் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியவர்.

பெரிய திரை மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் பாங்கோடு நடித்து தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்ட இவர் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை தற்போது பகிர்ந்து இருக்கிறார்.

ஷூட்டிங்காக சென்ற இடத்தில் யானை மிதித்து சாக கிடந்த போது நடந்த கசப்பான அனுபவங்கள் பற்றியும் அதன் பிறகு வெளி வந்த விமர்சனங்கள் பற்றியும் அதற்கு உரிய பதிலடி தற்போது சந்தியா கொடுத்து இருப்பது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அறிவியல் துறையில் பல்வேறு வளர்ச்சியை எட்டியுள்ள மனித சமூகம் பெண்கள் விஷயத்தில் இன்னும் கீழ்தரமான சுபாவத்தோடு தான் உள்ளது என்பதற்கு இவர் கூறிய சில செய்திகள் உதாரணமாக உள்ளது என கூறலாம்.

இதற்குக் காரணம் யானை மிதித்து உயிர் போகின்ற நிலைமையில் கூட தன் மார்பை பிடித்து டான்சர் ஒருவர் சுகம் கண்டார் என்ற செய்தி இவர் மூலம் வெளி வந்ததை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். மேலும் இதனை தன் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான சம்பவமாக கூறியிருக்கிறார்.

அத்தோடு யானை இவரை மிதிக்க காரணம் என்ன என்று பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவி வரும் சமயத்தில் சில விமர்சனங்கள் தன்னை வெகுவாக பாதித்து இருப்பதாக சந்தியா கூறி இருக்கிறார்.

இதனை அடுத்து இவர் பீரியட்ஸில் இருந்த போது கோயிலுக்குள் சென்றதால் தான் யானை இவரை மிதித்தது என்ற தகவல் வெளி வந்ததை அடுத்து இவர் நான் அந்த சமயத்தில் பீரியட்ஸில் இருந்தேன் என்பது எப்படி அவர்களுக்கு தெரியும். அவன் என்ன தூக்கிப் பார்த்தானா? அந்த விஷயத்தை நான் சொல்லாமல் எப்படி தெரியும் என்ற கேள்வியை வைத்திருக்கிறார்.


இதை விட ஒரு படி மேலே சென்று நான் அணிந்திருந்த ஆடை சிவப்பாக இருந்ததால் அது யானைக்கு பிடிக்கவில்லை என்றும் நான் போட்ட பெர்ஃப்யூம் வாசம் பிடிக்காமல் தான் மிதித்தது என்றும் பல்வேறு வகையான கருத்துக்களை முன் வைத்து பேசுகிறார்கள். இந்த சம்பவத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட என்னிடம் இது பற்றி எதுவும் கேட்கவில்லை.

அப்படி இருக்கும் போது யானை மிதித்ததற்கான காரணம் என்ன என்பது பற்றி அவர்கள் யூகத்தோடு பேசுவதால் என்ன பிரயோஜனம் என கேட்டிருக்கிறார்.

மேலும் அந்த சமயத்தில் நான் அப்படி இல்லை என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். அப்படி இருக்கும் போது இது போன்ற விமர்சனங்களை கொடுமையான முறையில் செய்வது முறையா? நானே அந்த கொடுமையான சம்பவத்தில் இருந்து தற்போது தான் மீண்டு வந்திருக்கிறேன்.

யானை தாக்கியதால் என் உடம்பில் ஏழு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு சில பாகங்களை அகற்றக் கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். மேலும் யானை தாக்கியதால் நான் பயம் அடைந்து விட்டதோடு மயக்கமும் ஆனேன். இதில் இருந்து உயிர் பிழைத்ததே பெரிய விஷயம்.


யானை என்னை தும்பிக்கையால் தான் தாக்கியது. ஆனால் என் மேல் கால் வைத்து மிதித்தது போல எனக்கு இருந்தது. அந்த அளவுக்கு வலியில் இருந்தேன். தற்போது அந்த வலியை விட வெளி வரக்கூடிய விமர்சனங்களை பார்த்தால் கூடுதல் வலி ஏற்படும் அளவு உள்ளது.

எனவே விஷயம் முழுவதும் தெரிந்து கொள்ளாமல் இது போன்ற வீணான வதந்திகளை பரப்புவது மிகவும் தவறு என அந்த கொடுமையான சம்பவம் குறித்து சந்தியா கூறியதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த செய்தியை வைரலாக மாற்றி விட்டார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES