பிக்பாஸ் பிரபலத்துக்கு கொரோனா தொற்று

பிக்பாஸ் பிரபலத்துக்கு கொரோனா தொற்று

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை, கொரோனா தொற்று உறுதியானதும், தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறாராம்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. ஏராளமான நடிகர், நடிகைகளும் இந்த வைரஸ் தொற்றில் சிக்குகிறார்கள். சினிமா படப்பிடிப்பில் பங்கேற்பவர்களையும் கொரோனா தாக்குகிறது. 

ஏற்கனவே நடிகர்கள் அமீர்கான், அக்‌ஷய்குமார், மாதவன், டோவினோ தாமஸ், நடிகைகள் அலியாபட், கத்ரினா கைப், நிவேதா தாமஸ், இயக்குனர்கள் சுந்தர் சி, விஜயேந்திர பிரசாத் உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்களில் சிலர் சிகிச்சைக்கு பின் குணமாகி தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். 

இந்நிலையில் இளம் நடிகையான சாரா குர்பால் கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கியுள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சாரா குர்பாலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. சாரா

இதையடுத்து சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. தற்போது நான் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். சமீபத்தில் என்னைச் சந்தித்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES